Pages

Friday, August 6, 2010

இந்தி விடிவி ஆரம்பம்... உற்சாகத்தில் த்ரிஷா!

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இந்தி பதிப்புக்கான படப்பிடிப்பு சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.
தனக்கு மிகவும் பிடித்த இயக்குனருடன் மீண்டும் 'விடிவி'யில் இணைந்து பணியாற்றுவது உற்சாகமளிப்பதாக டிவிட்டியிருக்கிறார் த்ரிஷா.

தமிழில் சிம்பு, த்ரிஷா நடித்து, கெளதவ் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயாவை இந்தியில் ரீமேக்குவதில் போட்டி நிலவியது.
இறுதியில், போட்டான் கதாஸ் மற்றும் மும்பையின் பர்ப்பிள் ஆர்ட்ஸுடன் இணைந்து ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் கெளதம் வாசுதேவன் மேனன் இயக்குவது என ஒப்பந்தமானது.
சிம்பு கதாபாத்திரத்தில் பிரதிக் பாபர் நடிக்கிறார். இவர், நடிகர் ராஜ் பாபரின் மகன். ஜெஸ்ஸியாகவே வலம் வருகிறார் த்ரிஷா.
தனது முதல் படமான 'கட்டா மிட்டா' வெளியாகி இருக்கும் வேளையில், அவரது இந்திப் பயணத்துக்கு விடிவி மேலும் வலுசேர்க்கும் என த்ரிஷா நம்புகிறாராம்.
இந்தி 'விடிவி'வுக்கும் ரஹ்மானே இசை!

No comments:

Post a Comment