தனுஷ், ரிச்சா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ' மயக்கம் என்ன '. செல்வராகவன் இயக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.'மயக்கம் என்ன' படத்தில் இடம்பெறும் 'காதல் என் காதல்', மற்றும்' 3 ' படத்தில் இடம்பெறும் ' WHY THIS KOLAVERI ' ஆகிய இரண்டு பாடல்களுமே தனுஷ் எழுதி பாடி இருக்கிறார். இவ்விரண்டு பாடல்கள் குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் இணையத்தில் " நிறைய பேர் WHY THIS KOLAVERI பாடல் குறித்து கேட்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ' காதல் என் காதல் ' மற்றும் ' KOLAVERI ' ஆகிய இரண்டு பாடல்களுமே தனுஷ் எழுதி கம்போஸ் பண்ணியது தான். ஜி.வி அப்பாடலை இசைக் கலைஞர்களைக் கொண்டு தயார் செய்து கொடுத்தார். இதனை நாங்கள் நிறைய பேட்டிகளில் கூறியிருக்கிறோம். பாடலின் வரவேற்பை பார்த்து தனுஷ் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார். அவருக்குள் ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார் என்று நினைக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். |
Pages
▼
தனுஷ், ரிச்சா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ' மயக்கம் என்ன '. செல்வராகவன் இயக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.
No comments:
Post a Comment