இப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ஒப்ப்ந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் ஜகபதி பாபு. விக்ரமிற்கு இணையான வேடத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் சிவாஜி கணேசனை வைத்து பல படங்களை தயாரித்த வி.பி.பிரசாத்தின் மகன் ஜகபதி பாபு. தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தற்போது தான் தனது 100வது படத்தில் நடித்து முடித்துள்ளார். நவம்பர் 30ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்குகிறது. நா.முத்துகுமார் பாடல்கள் , ஜி.வி.பிரகாஷ் இசை, நிரவ்ஷா ஒளிப்பதிவு, ஆண்டனி எடிட்டிங் என இயக்குனர் விஜய்யின் டீம் மொத்தமும் இப்படத்திலும் இணைகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்க இருக்கிறார் விஜய். கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசபட்டினம் ஆகிய படங்களில் சண்டைக் காட்சிகள் பெரிய அளவில் இல்லை. இந்த 'தாண்டவம்' விஜய் இயக்கத்தில் உருவாகும் முழு நீள ஆக்ஷன் படம். |
No comments:
Post a Comment