Sunday, December 11, 2011

தி பியூட்டி பிக்சர்!


ம்புவீர்களா? செம 'நாட்டி’யாக இருக்கும் என்று எதிர்பார்த்த 'தி டர்ட்டி பிக்சர்’ படம் 'பியூட்டி’ பிக்சர் ஆக வெளிவந்திருக்கிறது!
 'சில்க்’கின் வாழ்க்கைக் கதை என்று சொல்லப்பட்டாலும், ஒரு 'நடிகை’யின் கதை’ என்பதுதான் சரி. 'சில்க்’ என்ற கேரக்டரில் ஒரு  நடிகை எதிர்கொள்ளும் அனைத்து ஏற்றத்தாழ்வுகளையும் பொளேரென உணர்த்தி இருக்கிறார்கள்!
'சில்க்’ ஆக வித்யா பாலன். சில்கின் அந்த மயக்கும் விழிகளோ ஈர இதழ் களோ இல்லை. ஆனாலும், ரசிக்க வைக்கிறார் வித்யா. கேரக்டருக்கு நியாயம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தனது 'ஹோம்லி’ இமேஜை அநியாயத்துக்குக் காலி செய்து நடித்திருக்கிறார். ஆனாலும், எதுவும் தேவை இல்லாத விரசம் கிடையாது.    
எல்லை தாண்டிய கவர்ச்சி மினு மினுப்புகளுக்கு மத்தியில் 'இன்டர் வெல்லுக்குப் பிறகு மாற நான் சினிமா இல்லை... சில்க்!’ என்று அதீதத் தன்னம்பிக்கை திமிர் காட்டும் போதும், இவரைப் பார்க்கப் பிடிக் காமல் முகத்தில் அடித்தாற் போல், அம்மா கதவைச் சாத்தும்போது கலங்கி நிற்கும் இடத்திலும்... வித்யா பாலனின் நடிப்பு பளிச் பளிச்!
  'ஸ்மாஷிங் சூர்யகாந்த்’(!) ஆக, நஸ்ருதீன் ஷா போகிற போக்கில் வித்யாவின் கவர்ச்சியை மீறியும் கவனம் ஈர்க்கிறார்.
'இப்ப நான் நாலு பட்டனைக் கழட்டுனா இங்க இருக்கிறவங்களுக்கு வேர்த்துக் கொட்டும்!’, 'ஃபேமிலியா இருக்கும்போது மூஞ்சைத் திருப்பிக்கிறீங்க. ஆனா, தனியா படத்தைப் பார்த்துட்டு ஃபேமிலியைப் பெருக்கிக்கிறீங்க!’,  'நீங்க கடைசி வரை நாகரிகப் போர்வையிலேயே இருங்க. ஆனா, நான் என் ரசிகர்களுக்குக் காட்டிட்டேதான் இருப்பேன்!’ - படம் முழுக்கத் தெறிக்கின்றன கூர்மையான வசனங்கள்.
''இதில் செக்ஸ் மட்டும் அல்ல... அதைத் தாண்டி 'சில்க்’பற்றி சென்சிபிளான விஷயமும் இருக்கிறது!'' என்று முன்னர் கூறியதற்கு ஏற்ப சென்சிபிள் சினிமாதான் படைத்திருக்கிறார் இயக்குநர் மிலன் லுத்ரியா.  
வித்யா பாலன் என்ன சொல்கிறார்... ''இந்தப் படம் போர்ன் படம் அல்ல... போல்டான படம் என்ற நம்பிக்கை எனக்கு ஷூட்டிங்குக்குப் போவதற்கு முன்னேயே இருந்தது. அது ஜெயித்திருக்கிறது. இந்திய நடிகைகள் அனைவ ருக்கும் இந்தப் படம் சமர்ப்பணம்!''  என்று சிரிக்கிறார்.
நிஜம்தான்!

No comments:

Post a Comment