Friday, November 25, 2011

எல்லா ஹீரோக்களுக்கும் நான் போட்டிதான்!


னுஷ் சொன்னது உண்மைதான். அவரைப் பார்க்கப் பார்க்க ரொம்பவே பிடிக்கிறது. '3’ படத்துக்காக மனைவி ஐஸ்வர்யாவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே ஸ்ருதிஹாசனுடன் டூயட் பாடிக்கொண்டு இருந்தவரைச் சந்தித்தேன்.  
 '' 'மயக்கம் என்ன?’ ''
''மனசைப் பின் தொடரும் மயக்கம்! பட விளம்பரங்களில் 'ஃபாலோ யுவர் ஹார்ட்’னு இருக்கும். மனசு சொல்றதைக் கேக்குறது அவ்வளவு சாதாரணமான விஷயம் கிடையாது. மனசு கண்டதைச் சொல்லும். அதுல பாதி நல்லது இருக்கலாம்... பாதி கெட்டது இருக்கலாம். ஆனா, உங்க மனசு சொல்றதை ஃபாலோ பண்ண ஒரு தனி தைரியம் வேணும். மனசு சொல்ற தைக் கேக்கிறதுனால் வர்ற விளைவுகளைச் சந்திக்க தனி தைரியம் இருக்கணும். தன் மனசை வழிகாட்டியா வெச்சு வாழ்ற ஒருத்தனோட வாழ்க்கைதான் இந்தப் படம். நிச்சயம் படம் பார்த்த பின்னாடி உங்க மனசை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிருவீங்க!''
''என்ன திடீர்னு பாடலாசிரியர் ஆகிட்டீங்க?''
'' 'மயக்கம் என்ன’ படத்தில் பாட்டு எழுதினது ரொம்பவே தற்செயலா நடந்தது. ஷூட்டிங் அப்போ நிறைய நேரம் இருந்ததால், யோசிச்சு எழுத முடிஞ்சது. 'பிறை தேடும் இரவிலே’ பாட்டு, ஷூட்டிங் ஸ்பாட்ல ஷாட் இல்லாம வெட்டியா உக்காந்து இருந்தப்ப எழுதினேன். 'காதல் என் காதல்...’ ரெண்டு நண்பர்கள் பேசிக்கிற மாதிரி கேஷ§வலா வேணும்னு செல்வா கேட்டார். சும்மா எழுதிக் கொடுத்தேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சு அப்படியே வெச்சுட்டார். 'ஓட ஓட...’ பாட்டு கம்போஸிங்ல நானும் செல்வாவும் இருந்தோம். ஜி.வி. டம்மி வரிகள் கேட்டார். நான் ஒரு லைன் சொன்னேன். செல்வா அடுத்த லைன் சொன்னார். அதையே அழகாப் பாட்டு ஆக்கிட்டார் ஜி.வி. எதுவுமே பிளான் பண்ணி நடக்கலை. எனக்குக் கவிதையா எழுதத் தெரியாது. ரொம்ப லோக்கலா எழுதுவேன். அது இதுல வொர்க்-அவுட் ஆகியிருக்கு!''
'' 'ஒய் திஸ் கொல வெறிடி’னு பாட்டு எழுதி அதைப் பாடவும் செய்றீங்க... அடுத்ததா மியூஸிக் டைரக்டர் ஆகிடுவீங்களோ?''
''அதை நான் எழுதணும்னு நினைக்கவே இல்லை. இசையமைப்ப£ளர் அனிருத் எனக்கு டியூன் போட்டுக் காட்டினார். டியூனைக் கேட்டதுமே மண்டைக்குள்ள வரிகள் ஓட ஆரம்பிச்சது. அங்கேயே டம்மி வரிகளை மைக் எடுத்துப் பாட ஆரம்பிச் சேன். அதை ஐஸ்வர்யா ரெக்கார்ட் பண்ணினாங்க. அப்படி ஒரே தம்மில் பாடின அந்தப் பாட்டுக்கு லிரிக் பேப்பரே கிடையாது. ரெண்டே இடத்தில் மட்டும் வார்த்தைகளை மாத்தினோம். ஆறு நிமிஷத்துல மொத்தப் பாட்டும் ரெடி. நான் எழுதுறது ஹிட் ஆகுறதால எழுதச் சொல்றாங்க. ஆனா, மியூஸிக் பண்றது எல்லாம் பெரிய விஷயம். அப்படி ஒரு ஐடியாவே இல்லை. இதுவே எனக்கு அதிகம்தான்!''
''அறிமுக இயக்குநர் ஐஸ்வர்யா இயக்கம் பத்தி தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் என்ன கமென்ட் சொல்வார்?''
''நான் என் வேலையைப் பார்க்கிறேன். அவங்க அவங்க வேலையைப் பார்க்கிறாங்க. அவங்க கேட்கிறதை நடிச்சுக் கொடுக்கிறேன். ஷூட்டிங் ஸ்பாட்ல எவ்வளவு புரொஃபஷனலா நடந்துக்கணுமோ... அப்படித்தான் இருக்கோம். அவங்களும் அந்தப் பொறுப்பை உணர்ந்து வேலை பார்த்துட்டு இருக்காங்க!''
'' 'தனுஷ் நம்ம பிரதர்தான். அவர் விருது வாங்கினதில் சந்தோஷம்’னு சிம்பு சொல்லி இருந்தாரே?''
''என்கிட்ட ஏன் சிம்புவைக் குறிப்பிட்டுக் கேட்கிறீங்க? அவர் வாழ்த்தினார்னு நானும் கேள்விப் பட்டேன். நான் விருது வாங்கினதும், நிறைய நடிகர்கள் வாழ்த்துச் சொன்னாங்க. அது மாதிரிதான் சிம்புவும் எனக்கு வாழ்த்துச் சொல்லியிருக்கார். அவர் வாழ்த்தியதில் எனக்குச் சந்தோஷம். மத்தபடி சிம்புவை என்னோட கம்பேர் பண்ணிப் பேசுறதோட அர்த்தம் எனக்குப் புரியலை!''
''இரண்டு, மூன்று நடிகர்கள் சேர்ந்து நடிக்கிற கலாசாரம் வந்துட்டு இருக்கு... நீங்க ரெடியா?''
''இதில் மூடி மறைச்சு எல்லாருக்கும் பிடிச்ச பதில் சொல்ல முடியும். ஆனா, எனக்கு 28 வயசு ஆச்சு. இதுக்கு மேல் உண்மை பேசுறதுதான் சரியா இருக்கும். சேர்ந்து நடிப்பதில் நிறையச் சிக்கல்கள் இருக்கு.  சில்லியான ஈகோ பிரச்னைகளை அப்புறம் பார்க்கலாம். ரெண்டு ஹீரோ-ஹீரோயின்களுக்கான சம்பளம்னு பட்ஜெட் எகிறிடும். இந்திப் படங்களை இந்தியா முழுக்கப் பார்க்கிறாங்க. ஒரு மாநிலத்தில் படம் ஃப்ளாப் ஆனாலும், இன்னொரு ஸ்டேட்ல போட்ட காசை எடுத்திரலாம். தமிழ் சினிமாவுக்கு தமிழ்நாடு மட்டும்தான். தெலுங்கில் மார்க்கெட் உள்ள தமிழ் ஹீரோக்கள் ஒரு சிலர்தான். பிராக்டிகலா... போட்ட பணத்தை எடுக்க வாய்ப்புகள் கிடையாது. அது இல்லாம, யார் பேர் முதல்ல வருதுங்கிறதுல இருந்து பிரச்னை ஆரம்பிக்கும். கதையில் யாருக்கு முக்கியத்துவம் உண்டு, இயக்குநர் யாரைக் காலி பண்ணுவார்னு நிறையச் சந்தேகம் வரும். எனக்குக் கதை பிடிக்கணும், டைரக்டர் மேல, கூட நடிக்கிற நடிகர் மேல நம்பிக்கை வரணும். இவ்வளவும் நடந்தாதான் நான் சேர்ந்து நடிப்பேன். இப்போதைக்கு அதுக்கு வாய்ப்பு இல்லை!''
''ரஜினி என்ன சொன்னார்?''
''அவரைச் சுத்தி 100 பேர் இருந்தாலும் மனசுல தனி ஆளா இருப்பார். பிரைவஸியை ரொம்பவிரும்புவார். எப்படி இருக்கார்னு கேட்டீங்கன்னா, 10 பக்கத்துக்குப் பதில் சொல்வேன். நல்ல ஆரோக்கியத்தோட இருக்கார். பழைய வேகத்தோட உற்சாகமா இருக்கார். பழைய ரஜினி ரெடி!''
''இப்போ ஹீரோ இமேஜுக்கு வேல்யூ கம்மி. யார் நடிச்சாலும் படம் நல்லா இருந்தாதான் ஓடும்கிற நிலை... இப்போதைய நிலையில் நீங்க ரசிக்கிற அல்லது பார்த்து மிரள்கிற ஹீரோ யார்?''
''ரஜினி சார் மாதிரி என்னை மொத்தமா இம்ப்ரெஸ் பண்ணினது யாரும் இல்லை. இப்போ உள்ள ஹீரோக்கள் ஒவ்வொருத்தர்கிட்ட இருந்தும் ஒரு விஷயம் பிடிக்கும். எல்லாருமே எல்லாருக்கும் போட்டிதான். நானும் எல்லாருக்கும் போட்டிதான். நான் என் வேலையைப் பார்த்துட்டு இருக்கேன். அதனால நான் யாரைப் பார்த்தும் மிரளவில்லை!''  




No comments:

Post a Comment