Sunday, November 27, 2011

'ஜாக்'கும் நான் 'ஜில்'லும் நான்!


திரைப்படத்தில் இரட்டை வேடம் போட்டு நடிப்பது எல்லா நடிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.  இதற்கு எந்த நாட்டு நடிகர் நடிகைகளும் விதிவிலக்கல்ல.

வழக்கமாக இரட்டை வேடப் படங்களில் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே காட்சியில் இணைந்து இருப்பது போன்ற காட்சிகள் குறைவாக இருக்கும்.

ஆனால், படம் முழுவதும் அந்த இரண்டு வேடங்களும் ஒன்றாக அதிக காட்சிகளில் தோன்றுவது போன்ற படங்கள் வருவது குறைவு. காரணம், அப்படிப்பட்ட காட்சிகளை எடுக்க நடிகருக்கும் இயக்குனருக்கும் கூடுதல் கவனம் தேவைப்படும். படப்பிடிப்பு நேரமும் அதிகமாகும்.

ஹாலிவுட் படங்களில் படம் முழுவதும் இரட்டை வேட கதாபாத்திரங்கள் ஒன்றாக வரும் படங்கள் வெளிவந்ததுண்டு.

அடுத்த வாரம் வெளிவர இருக்கும் 'JACK AND JILL' படத்தில் ஆடம் சாண்ட்லர் அண்ணனாகவும் தங்கையாகவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.  படத்தின் டிரெய்லரில் அண்ணனும் தங்கையும் ஒன்றாக ஸ்கிப்பிங் ஆடும் காட்சி இடம் பெற்றுள்ளது.

அவருடன் AL PACINO இப்படத்தில் நடித்துள்ளார்.

                                                                          JACK AND JILL TRAILER

No comments:

Post a Comment