Sunday, November 27, 2011

பேஸ்புக் ,ட்விட்டரை எண்ணி அஞ்சும் அரசாங்கங்கள்.

மீனவர் பிரச்சினை,சமீபத்தில் மூன்று உயிர்களுக்கான போராட்டம் போன்றவை பெரு வெற்றி பெற்றது.அண்ணா ஹசாரே போராட்டத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.உலகெங்கும் ஆட்சிகளுக்கு எதிரான மக்களின் குரல்கள் உரத்து ஒலிக்கின்றன.முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போராட்டங்களில் வீச்சு அதிகரித்திருக்கிறது.இதற்கு காரணம் பேஸ்புக்,டுவிட்டர்,கூகுள் பிளஸ் போன்ற சமூக வலைத்தளங்கள் என்பது பலருடைய கருத்து.


                                                                                                  
மீனவர் பிரச்சினையிலும் ,மரண தண்டனைக்கு எதிராகவும் டுவிட்டரில் பதிவர்கள் பங்கு கொண்ட அறப்போராட்டம் குறைத்து மதிப்பிட முடியாதது.(தமிழ்மணத்திற்கு நன்றி).லண்டனில் ஏற்பட்ட கலவரம் நாடு முழுக்க உடனே பரவியது.சமூக வலைத்தளங்களே இதற்கு காரணமாக சொல்லப்பட்டன.முக்கியமான நேரங்களில் பேஸ்புக் கையும்,டுவிட்டரையும் ,கண்காணிக்க மத்திய  அரசு முடிவு செய்துள்ளது.

                                                                                                  
இந்த வலைத்தளங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றம் மிகவும் எளிதாகி விட்டது.உடனடியாக உலகம் முழுக்க எல்லா செய்திகளும் பரவி விடுகின்றன.கருத்தொற்றுமை ஏற்படுத்துவதிலும்,செயல்பாட்டை தூண்டுவதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றன.மக்களின் குரல்கள் ,அவர்களது எண்ணங்களை சமூகமும்,அரசாங்கங்கங்களும் உடனே தெரிந்து கொள்கின்றன.

 

                                                                                         
பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதி தங்களது கருத்துக்களை தெரிவிப்பார்கள்.ஆசிரியர் நினைத்தால் அது வெளியாகும்.இல்லாவிட்டால் எழுதிய கடிதம் வேஸ்ட்.இப்போது சமூக வலைத்தளங்களில் கணக்கு இருந்தால் போதும்.உலகம் முழுக்க ஒருவரது எண்ணங்கள் போய் சேர்ந்து விடுகிறது.பிரௌசிங் சென்டரில் பெரும்பாலனவர்கள் பேஸ்புக் கிலோ ,டுவிட்டரிலோ இருப்பதை பார்க்கிறேன்.

                                                                                          
ஒட்டு மொத்த சமூக வளர்ச்சியை கணினிக்கு முன்பு,கணினிக்கு பின்பு என்று வைத்துக்கொள்ளலாம் போலத்தெரிகிறது.கணினியின் தாக்கம் உலகைப் புரட்டிப் போட்டு விட்டது.இவற்றில் நல்லது இருப்பதை போலவே கெட்டதும் இருக்கத்தான் செய்கிறது.ஐம்பது சதவீதத்திற்கும் மேற்பட்ட பகிர்வுகள் ஆபாசமானவை என்கிறது ஓர் ஆய்வு.சிலர் தங்களது வக்கிரங்களை தணித்துக்கொள்ள அரை நிர்வாணத்தையும்,ஆபாசத்தையும் கொட்டி வைக்கிறார்கள்.



                                                                                         
ஆபாசம்,வக்கிரங்கள் போன்றவற்றை  தவிர்த்து விட்டு பார்த்தால் பயன் அதிகம் என்பதுதான் நிஜம்.அது நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்கும்.அரப்போராட்டங்களின் வெற்றியை மிகவும் எளிதாக்கும் தன்மையை இந்த வலைத்தளங்கள் பெற்றிருக்கின்றன.வலிமை பெற்ற ஊடகமாக சமூக வலைத்தளங்கள் நிலை பெற்று விட்டன.

1 comment:

  1. மிகவும் செரி தோழரே ! Internet-ஐ நல்ல முறையில் பயன் படுத்தினால் நல்லது ! மேலும் நல்லது என்றும் சொல்ல முடியாது ! ஏனெனில் பலர் தங்களின் உண்மையான வாழ்க்கை சந்தோசத்தை மறந்து இதே உலகம் என்றும் வாழ்ந்து வருகிறார்கள் ! அதற்கு உதரணமாக பின் வரும் Link-ஐ கிளிக் செய்த அந்த Video-வை பாருங்கள் நண்பர்களே ! http://bit.ly/q9SnfK நன்றி !

    ReplyDelete