Friday, November 25, 2011

மிஸ்டர் மியாவ்: வாயாடி!


ஜினியை குசலம் விசாரிக்க, போயஸ் கார்டனும் கோபாலபுரமும் தேதி கேட்டதாம். யாரிடமும் சிக்கிக்கொள்ள விரும்பாத ரஜினி, ''உங்களுக்கு எதுக்கு சிரமம்...'' என்று இருவரையும் நாசூக்காகத் தவிர்த்துவிட்டாராம்! 
நாகி ரெட்டியின் 100-வது ஆண்டு நினைவாக, அவரது மகன் வெங்கட்ரமண ரெட்டி தயாரிக்கும் படத்தின் ஹீரோ, அஜீத். தற்போது ஒரு தெலுங்கு படத்தை சென்னையில் இயக்கி வரும் 'சிறுத்தை’ சிவாவை இயக்குனராக ஒப்பந்தம் செய்துவிட்டார்கள்.
''நான் டைரக்ஷன் பண்ற '3’ படத்தில் கெஸ்ட் ரோலா சின்ன வேடத்தில் நடிங்கப்பா...'' என்று ரஜினியிடம் அன்பு கோரிக்கை வைத்து இருக்கிறாராம் ஐஸ்வர்யா. மகளின் அன்பை மறுக்க முடியாமல் யோசித்து வருகிறார் ரஜினி.
Click...
'அங்காடித் தெரு’ அஞ்சலி வீட்டில் கத்திச் சண்டை சத்தம் காதை பிளக்கிறதாம். தினமும் அதிகாலை கிண்டி ரேஸ் கோர்ஸில் ஹார்ஸ் ரைடிங்கும் செல்கிறாராம். ஏனாம்? 'கரிகாலன்’ படத்தில் அஞ்சலிக்கு ஜான்சி ராணி ரேஞ்சுக்கு பெண் போராளி கேரக்டர். அதற்காகத்தான் விசேஷப் பயிற்சி எடுத்து வருகிறார், 'வாயாடி’ அஞ்சலி.

No comments:

Post a Comment