Tuesday, August 17, 2010

100 சிசி-யில் ஒரு கார்!

'குறைவான சக்தி கொண்ட இன்ஜின்... நிறைவான மைலேஜ்!' - இதுதான் சென்னை ராஜ ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரி யில், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக் கும் மாதேஷ் எடுத்துக் கொண்ட புராஜெக்ட் கான் செப்ட். மூன்று மாதத்துக்குள் '100 சிசி காரை' உருவாக்கும் எண் ணம் முழுமை யடைந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.
மாதேஷ் உரு வாக் கிய காரின் வெளித்தோற்றம் குழந்தை செய்த பொம்மை போல இருந்தாலும், அருகே சென்று பார்த் தால்தான் மற்ற அம்சங்கள் தெரிகின்றன.
டேஷ் போர்டு, ஸ்டீயரிங் வீல், ஆக்ஸிலரேட்டர் - பிரேக் பெடல்கள், சொகுசான மூன்று இருக்கைகள் என ஒரு முழுமையாகத் திகழ்கிறது இந்த குட்டி கார்.
''நம்ம நாட்டுல சின்ன கார்கள்தான் அதிகமா விற் பனை யாகுது. ஒரு கார்ல அதிகபட்சம் ஐந்து பேர் பயணம் செய்யலாம் என்றாலும், பெரும்பாலும் குறைவான ஆட்கள்தான் பயணம் செய்றாங்க. இதுனாலயும் எரிபொருள் செலவு அதிகமாகுது. அதனால், மூன்று பேர் பயணம் செய்யுற மாதிரி குறைந்த இன்ஜின் திறன்ல கார் உருவாக்கணும்னு தீர்மானிச்சேன். அது ஆட்டோ மாதிரியும் இருந்துடக் கூடாதுன்னு கவனமா ஸ்கெட்சை உருவாக் கினேன்!'' என இயல்பாகப் பேசுகிறார் மாதேஷ்.
''பஜாஜ் சபையர் ஸ்கூட்டர்ல இருந்த இன்ஜினையே பயன் படுத்தி, காருக்குத் தேவையான ஒவ்வொரு பாகங்களையும் பழைய வாகனங்களோட உதிரி பாகங்கள்ல உருவாக்கினேன். சேஸி முழுக்க முழுக்க லாரியோட ஸ்டீயரிங் ராடுல உருவானது. டேஷ் போர்டு - பம்பர் மாருதி ஆல்ட்டோவோடது. ஸ்ப்ளெண்டர் ஹெட்லைட்ஸ், ஸ்கூட்டரோட வீல்கள், லீஃப் ஸ்பிரிங், ஸ்கூட்டர் சஸ்பென்ஷன்... இப்படி எல்லாமே வேற வாகனங்கள்ல இருந்து எடுத்தேன். இந்த கார்ல லோடு சமமா டிஸ்ட்ரிபியூட் ஆவதால் நல்ல ரெசிஸ்டென்ஸ் கிடைக்குது. ஆட்டோமேட்டிக் வேரியேஷன் கியர் ஷிஃப்டிங் மெக்கானிசம், செயின் ட்ரைவ் - இதெல்லாம் இருப்பதால் கார் ஸ்மூத்தா மூவ் ஆகும். நல்ல பிரேக்கிங்கும் கிடைக்குது. மூன்று பேர் போகக் கூடிய வசதி உள்ள இந்த கார் மணிக்கு 55 கி.மீ போகும்.
இந்த காரோட மொத்த வெயிட் 280 கிலோ. எடை குறைவா இருக்கிறதால பெட்ரோல் செலவும் குறைவுதான். அதாவது லிட்டருக்கு 27 கி.மீ! அதேசமயம், காரோட வீல் பேஸ் குறைவா இருக்கறதால, வளைவுகளில் சுலபமா திருப்ப முடியும். இந்த காரை முழுவதுமாக உருவாக்க எனக்குச் செலவான தொகை ரூ.32,000 மட்டும்தான்!'' என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார் மாதேஷ்!

No comments:

Post a Comment