Thursday, August 19, 2010

எந்திரன்: சொன்னதை செய்து முடிப்பான் 'சிட்டி'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,உலக அழகி ஐஸ்வர்யா ராய், பிரம்மாண்டத்திற்கு பேர் போன ஷங்கர், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் என எல்லா பிரம்மாண்டங்களும் இணைந்துள்ளதால் இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் எந்திரன்.
எந்திரன் படத்தின் கதையை அப்படத்தின் ஹிந்தி இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
ரஜினி 10 வருடங்கள் கடுமையாக உழைத்து, ரோபோ ஒன்றை உருவாக்குகிறார். அதற்கு 'சிட்டி' என்று பெயரிடுகிறார். 'சிட்டி'யை வைத்து நாட்டில் பல நல்ல காரியங்களை செய்து முடிக்க திட்டமிடுகிறார்.
'சிட்டி' ஒரு சுவாரஸ்யன். மனிதனைப் போலவே வடிவமைக்கப்பட்ட எந்திரன். 'சிட்டி'க்கு தண்ணீராலோ தீயினாலோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. 'சிட்டி' டான்ஸ் ஆடுகிறது, பாட்டு பாடுகிறது, சண்டை போடுகிறது.. எல்லாம் செய்கிறது. மனிதர்களால் செய்யக் கூடியது மட்டுமல்ல, செய்ய முடியாததையும் 'சிட்டி'யால் செய்ய முடியும். 'சிட்டி' இயங்குவதற்கு தேவை மின்சாரம் மட்டுமே.
ரஜினி என்ன சொன்னாலும் ஏன் எதற்கு என கேட்காமல் அதை அப்படியே செய்து முடிப்பான் 'சிட்டி'. அது விளையாட்டாக சொல்லப்பட்டதா இல்லை நிஜமாகவே செய்வதற்காக சொல்லப்பட்டதா என்பது பற்றி ஆராயும் திறன் 'சிட்டி'க்கு கிடையாது. சொன்னதை செய்து முடிப்பான். எல்லாம் வல்ல 'சிட்டி'யால் செய்ய முடியாத ஒன்று - பொய் சொல்வது.
ஒரு டெலிபோன் டைரக்டரியை ஒரு முறை புரட்டிப் பார்த்தால் போதும், அதிலுள்ள எல்லா தகவல்களையும் அப்படியே ஞாபகத்தில் ஏற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்த 'சிட்டி'க்கு மனித உணர்வுகளை மட்டும் புரிந்து கொள்ள முடியாது.
ரஜினி பின் விளைவுகளை அறியாமல், மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும்படி 'சிட்டி'யை மெருகேற்ற, 'சிட்டி'க்கு வரும் முதல் உணர்வு.. காதல்..! இரும்பிலே ஒரு இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது.
'சிட்டி'யின் காதலால் ரஜினிக்கு என்ன பாதிப்புகள் வருகின்றன? ரஜினி எதற்காக 'சிட்டி'யை உருவாக்கினாரோ, அந்த திட்டம் நிறைவேறியதா? தன் படைப்பான 'சிட்டி'யை ரஜினியே அழித்துவிடுவாரா..? ரஜினியா.. 'சிட்டி'யா..? செப்டம்பர் மாதம் தான் தெரியும்.


ஜாம்பவான்களின் பார்வையில் எந்திரன்!
கருணாநிதி : 'எந்திரன்' படம் இந்திய நாட்டு மக்கள் மட்டுமல்லாமல், உலக நாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படமாகும். மனிதநேயம் கொண்டவரும் மனதில் அப்பழுக்கின்றி மாசற்ற மாணிக்கங்களில் ஒருவராக விளங்குபவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரும்பாடுபட்டு வெளிக்கொணரும் இந்தப் படம் பெரும்புகழ் பெறும் என்பதில் ஐயமில்லை.
ஒப்பனை செய்துகொள்ளவே ஒவ்வொரு நாளும் ஆறு மணி நேரம் வரை ரஜினிகாந்த் செலவிட்டு இருக்கிறார் என்றால், அவர் எடுத்துள்ள சிரமத்திற்கு, கொடுத்துள்ள உழைப்புக்கு ஈடு இணையற்ற பரிசாக இந்த 'எந்திரன்' வெளிவர இருக்கிறது.இந்த 'எந்திரன்' படத்தின் மூலம், ‘எங்கெங்கு காணினும் வெற்றியடா! 'எந்திரன்' படம் ஏழுகடல் தாண்டியும் முழங்குமடா!' என திரையுலகம் திரும்பத் திரும்ப பாடத்தான் போகிறது..."
சிரஞ்சீவி : ரஜினி இளமையாக திரையில் ஐஸ்வர்யாராயுடன் டூயட் பாடுவதைப் பார்க்கும்போது எனக்கு பொறாமையாக உள்ளது. 'ரோபோ' என்ற பிரமாண்டமான படத்தில் ரஜினி கலக்கிக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லையே என ஏக்கமாய் உள்ளது. இதையெல்லாம் நான் தவறவிட்டு விட்டேட் . இதைப் பார்த்ததும் எனக்கு மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டது. ஆனால் பொறாமை என்பது ஒரு கலைஞனாக நான் சொன்னது. ஆனால் அண்ணன் ரஜினி எதைச் செய்தாலும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தும் சகோதரன் நான். அவரைப் போன்ற அற்புதமான கலைஞரையும், அருமையான மனிதரையும் பார்க்க முடியாது. இந்தப் படம் சரித்திரம் படைக்கும்.
அமிதாப் பச்சன்: ரஜினியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரைப் போன்ற கலைஞர்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள்.இந்திய மண்ணின் உண்மையான மைந்தன் ரஜினிதான். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி. அவரது மனித நேயம், எளிமையை நான் மிகவும் விரும்புகிறேன். வானளாவிய புகழ், செல்வாக்கு எல்லாம் இருந்தும், ஒரு சாதாரண மனிதனாகவே தன் வாழ்நாள் முழுவதும் இருந்து வருகிறார் ரஜினி. அவரைப் போன்ற ஒரு சிறந்த மனிதரை, நண்பரை, கலைஞரை நான் பார்த்ததில்லை.
கலாநிதிமாறன் : ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு இனி யாரும் வர போவதும் இல்லை,பிறக்க போவதும் இல்லை. இப்போது எல்லாம் நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தவுடன் ஒரு தொகையை அட்வான்ஸாக வாங்கி கொள்வார்கள். ஆனால் ரஜினி எந்திரன் படத்தில் 2 வருடம் நடித்திருக்கிறார் அதற்காக அவர் என்னிடம் இருந்து ஒரு ரூபாய் கூட வாங்க வில்லை. படம் வெளிவரும் போது வாங்கி கொள்கிறேன் என்று கூறி விட்டார். அவரது இந்த நல்ல குணங்களே அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கிருக்கிறது. எந்திரன் ட்ரெய்லர் திரையில் பார்த்தீர்கள் அவரது படையப்பா நீலாம்பரி பாணியில் சொல்ல வேண்டுமானால் "ரஜினிக்கு வயதானாலும் அவரது ஸ்டைலும் அழகும் மாறவே இல்லை!".
ரிலீஸ் முன்னரே சாதனை பட்டியலில் எந்திரன்!
சைனாடெய்லி பத்திரிக்கையின் பாராட்டு:
ரஜினியின் எந்திரன் புகழ் சீனா வரை பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டிலிருந்து வெளியாகும் 'சைனாடெய்லி' பத்திரிகை தனது முகப்பு பக்கத்தில் எந்திரன் பற்றி குறிப்பிட்டுள்ளது.
பிரபல விமர்சகரான தரண் ஆதர்ஷ் " இன்கா நாகரீகத்தின் சின்னங்கள் அமைந்துள்ள மாச்சு பிக்குவில் படமாக்கப்பட்டுள்ள ஒரே இந்தியப் படம் என்ற பெருமையும் எந்திரனுக்கே உண்டு. இந்தியாவின் மிக ஸ்டைலான, ஆடம்பரமான படம் இதுவே என்பது இந்தப் படத்தின் ஸ்டில்கள் மற்றும் ட்ரெயிலர்களைப் பார்க்கும் போதே தெரிகிறது" என்று குறிப்பிட்டுள்ளார் .
மேலும் அந்தப் பத்திரிகையின் கட்டுரையில், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இந்தப் படத்தில் நடித்திருந்தாலும், ரோபோவின் விற்பனை மற்றும் புகழுக்கு முதன்மையான காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். எழுபதுகளில் ஆரம்பித்த அவரது அபார நடிப்பு மற்றும் ஸ்டைல்கள் இன்னமும் இந்தியத் திரையுலகை ஆட்சி செலுத்துகின்றன.150 படங்களுக்கு மேல் நடித்துள்ள ரஜினிகாந்த் ஒரு பாயும் புலியைப் போல திரையில் தோன்றும் போது அவரது ரசிகர்கள் அடையும் உற்சாகத்துக்கு அளவே இல்லை. பெரிய பெரிய கட் அவுட்டுகள், பேனர்கள் என தங்கள் உற்சாகத்தை அவர்கள் பிரமாண்டமாக வெளிப்படுத்துகிறார்கள்.அதிகரிக்கும் தயாரிப்புச் செலவு, மோசமான ஸ்கிரிப்டுகள் என தெலுங்குப் படங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்த நேரத்தில் ரோபோ வெளியாகிறது. இந்தப் படத்துக்குள்ள உள்ள எதிர்ப்பார்ப்பும், ரசிகர்கள் காட்டும் ஆர்வமும் தெலுங்குப் பட உலகுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது", என பாராட்டியுள்ளது.
ஆடியோ விற்பனையிலும் சாதனை!

எந்திரன் ஆடியோ வெளியான அடுத்த நாளே அமெரிக்கா,ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஐ.டியூன்ஸில் முதல் இடத்தை பிடித்தது.இதுவரை எந்த ஒரு இந்திய திரைப்படத்தின் பாடல்களும் வெளியான அடுத்த நாளே ஐ.டியூன்ஸில் டாப் 10-ல் இடம் பிடித்தது இல்லை. ஆனால் எந்திரன் முதல் இடத்தை பிடித்தது ஒரு மாபெரும் சாதனை.
தமிழில் ஆடியோ உரிமையை திங் இசை வெளியூட்டு நிறுவனம் 7 கோடி கொடுத்து வாங்கியது. இதுவரை எந்த ஒரு திரைப்படத்தின் ஆடியோ உரிமையும் இவ்வளவு விலைக்கு விற்பனை ஆனது இல்லை.
இந்தியில் ஆடியோ உரிமையை வீனஸ் இசை வெளியூட்டு நிறுவனம் 4 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

No comments:

Post a Comment