Friday, August 6, 2010

மந்திரம் போட்ட எந்திரன் விழா..!

கடந்த ஜுலை 31ம் தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் 'எந்திரன்' படத்தின் ஆடியோ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது. அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு இதோ...
* மலேசியாவில் புகழ் பெற்ற ஸ்டார் ஓட்டலான மேரியட்டில் சிம்பு, வடிவேலு நடிகைகள் பலர் தங்கினர். இதே ஓட்டலில் தங்கியிருந்த ரஜினியின் அறையை மட்டும் விழாக் குழுவினர் கமுக்கமாக மறைத்துவிட்டனர்.
* ஸ்கேனரில் ரஜினி, கலாநிதி மாறன், ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், ஐஸ்வர்யா ஐந்து பேரின் கைரேகை பதிக்கப்பட்டவுடன் பாஸ்வேர்ட் கேட்டது. அதன்பின்னர் பிரம்மாண்ட சப்தத்துடன் ஸ்கிரீனில் 'எந்திரன்' ஆடியோ வெளியிடப்பட்டது. வி.ஐ.பிககள் ஒருவர் கொடுத்து இன்னொருவர் பெறுதல் சடங்குகள் மாற்றப்பட்டு வித்தியாசமாக மக்கள் மத்தியிலேயே வெளியிட்டார்கள்.
* "யாரு வேணா உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று கடந்த ரெண்டு வருஷமா சூப்பர் ஸ்டார் நாற்காலியை கவலையே படாம விட்டுட்டு இருந்தார் ரஜினி. இதுவரை யாராலும் அதில் அமர முடியவில்லை. எந்திரனுகுப் பிறகு மறுபடியும் அவர்தான் அநத சூப்பர் ஸ்டார் ஸீட்டில் அமர்வார்" என்றார் வடிவேலு.
* "ரஜினியை தவிர அந்த சிம்மாசனத்தை எந்த நடிகராலும் நெருங்கக்கூட முடியாது," என்று பாராட்டினார் எந்திரன் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
* "சாதாரண நடிகர்களைக்கூட சன் டிவி சூப்பர் ஸ்டாராக்கி விடும்" என்று ஏனோ வெறுப்பை உமிழ்ந்தார் விஜய்யின் அப்பா சந்திரசேகர்.
* விழாவின் மேடையிலேயே ரஜினி, ஐஸ்வர்யாராயுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்ட ராதாரவி, "சீக்கிரமா ஐஸ்வர்யாராய் தென்னிந்திய நடிகர் சங்கத்துல உறுப்பினராக சேர்ந்துடணும்" என்று அன்புக் கட்டளை போட்டார்.
* கலாநிதி மாறனை மேடையில் அழைக்கும் முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்புகளான "மாசிலாமணி" 'அயன்', 'சுறா' படங்களின் பாடல்களை மேடையில் இசைத்து, அதன்பிறகே அவரை பேச விட்டனர்..
* ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 'ரோஜா' 'பம்பாய்' 'சிவாஜி' படங்களின் கீதங்களை இசைத்து அதன்பிறகு மேடையில் பேச வைத்தனர்..
* 'எந்திரன்' படத்துக்காக படப்பிடிப்பில் கடுமையாக ஷங்கர் உழைத்த காட்சிகளைக் கொண்ட ஸ்டில்களை ஸ்கிரீனில் காட்டிய பிறகே ஷங்கரை பேச அழைத்தனர்.
* மலேசியாவின் பாரம்பரிய நடனத்தை மேடையில் பிரம்மாண்டமாக அரங்கேற்றிய பின்னர் ஐஸ்வர்யாராயை அழைத்தனர்.
* 'பில்லா', 'முரட்டுக்காளை', 'அடுத்தவாரிசு', 'சிவாஜி' படங்களின் பாடல்களுக்கு சிம்பு மேடையில் பட்டையைக் கிளப்பி டான்ஸ் ஆடிய பின்னர்... கடைசியாக ரஜினி மேடையேறினார்.
* சென்னையிலிருந்து ஏகப்பட்ட ரஜினி ரசிகர்கள் 'எந்திரன்' கேசட் விழவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றனர். விழா முடிந்து வெளியில் வந்த கவியரசு வைரமுத்து தனக்கு நெருக்கமான மலேசிய நண்பரிடம் ரஜினியின் 'எந்திரன்' படம் ஷங்கரின் கனவு படம். அதனால் ஒவ்வொரு காட்சியையும் அங்குலம் அங்குலமாக செதுக்கி இருக்கிறார்" என்று பெருமிதப்பட்டார்.

No comments:

Post a Comment