''கோவை, திருச்சி என ஜெயலலிதா செல்கிற இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறதே..?''
''உண்மைதான்... ஆனால், அது மக்கள் கூட்டம் அல்ல. இன்னமும் ஏதோ ஒரு ''திருச்சி பொதுக்கூட்டத்தில் முதல்வர் மகள் செல்வி உள்பட குடும்ப உறுப்பினர்களையும் ஜெயலலிதா தாக்கி இருக்கிறாரே?''
''தலைவருக்கும் எதிர்க் கட்சித்  தலைவருக்கும் தான் இங்கே போட்டி! அப்படி இருக்க தலைவரின் குடும்ப  உறுப்பினர்களை வம்புக்கு இழுப்பது கொஞ்சமும் பண்பு இல்லை. பண்பாடு,  கலாசாரம் என மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழகத்தில்,  மூத்தோர்களை மதிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. அந்த விதத்தில்  தலைவர் கலை ஞரின் வயதையாவது மனதில்கொண்டு பேசி இருக்க வேண்டும். ஆக்கபூர்வ  வாதங்களை வைப்பதற்கு பதிலாக, அடுப்படிக்குள் நுழையலாமா? எங்கள் தரப்பிலும் இந்த அளவுக்குக் கீழே இறங்கி வந்து பேச எவ்வளவு நேரமாகிவிடும்? ஆனால், தலைவர் கலைஞர் எங்களைப் அப்படிப் பழக்கவில்லை. சமீபத்தில் நடந்த பேச்சாளர்கள் கூட்டத்தில்கூட, 'எதிரிகளையும் நாகரிகமாகப் பேசுங்கள்' என்றுதான் சொல்லி இருக்கிறார்!''
''செல்வியின்  பெங்களூரு வீட்டுக்கு ஓய்வு என்கிற பெயரில் கருணாநிதிசெல்வதே கர்நாடக  அரசுடன் பிசினஸ் குறித்து பேசுவதற் காகத்தான் என்கிறாரே ஜெயலலிதா?''
''மகளின் வீட்டுக்கு ஓய்வெடுக்கப் போகா மல், அடுத்தவர் வீட்டுக்கா போக ''காய்கறி தொடங்கி மளிகை சாமான்கள் வரை விலைவாசி உயர்ந்துவிட்டதாக மாஜி முதல்வர் பேசும் பேச்சில் நியாயம் உள்ளதாகத்தானே தெரிகிறது?''
''அண்மையில் ஒரு புத்தகம் படித்தேன்.  அதில் ஒரு பழமொழி... 'யானை கட்டிப் போரடிச்சாலும், பானை சட்டி  சரியில்லை!'ன்னு கிராமங்களில் சொல்வார்களாம். எத்தனையோ ஆக்கபூர்வ  முன்னேற்றங்களைத் தமிழகம் செய்தாலும், தவிர்க்க முடியாத சில பிரச்னைகள்  இருக்கத்தான் செய்யும். விலைவாசி உயர்வு உலகளாவிய விஷயம். நடுத்தரக்  குடிமகளாக நானும் கடைக்கு நேரடியாகப் போய் காய்கறி வாங்குகிற ஆள்தான்.  இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டால், தமிழகத்தில் காய்கறி,  மளிகைப் பொருட்களின் விலை எவ்வளவோ குறைவு. சென்னையில் மழைக் காலத்தில்  டிராஃபிக் ஜாம் ஏற்படுகிறது என்றுகூட அ.தி.மு.க-வினர் போராட்டம்  நடத்துகிறார்கள். மழையை சமாளிக்க முடியாமல் தலைநகர் டெல்லியே தடுமாறுகிறது.  சீனாவில் மழைக் காலத்தில் 100 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க 10  நாட்களுக்கும் மேலாகிறது. இத்தகைய நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால்,  தமிழகம் எந்த அளவுக்கு வளமாக இருக்கிறது என்பது புரியும். தி.மு.க-வைக்  குற்றம்சாட்டும் குறிக்கோளுடன் இயங்குபவர்களுக்கு இதெல்லாம் புரியாது!''''அடுத்தபடியாக மதுரையிலும் சக்தி மிகுந்த கூட்டத்தைத் திரட்ட ஜெ. தயாராகி வருகிறாரே?''
''மதுரையில் என்ன... அவர் மலேசியாவுக்கு வேண்டுமானாலும் போய் ''தி.மு.க-வின்  பிரசார சக்தியாகப் பேசப்பட்ட நீங்கள், இதுகாலம் வரை பெரிதாக ஏதும் தடாலடி  காட்டவில்லையே... நீங்களும் கோஷ்டிப் பூசலில் சிக்கிவிட்டீர்களா?''
(சிரிக்கிறார்) ''அப்படி எல்லாம் ஏதும்  இல்லை... நான் தி.மு.க-வில் அடிப்படைத் தொண்டராகத்தானே இணைந்தேன். பெரிய  தலைவராகவோ, மாபெரும் கூட்டத்தோடோ நான் கட்சிக்குள் வரவில்லை. அதனால், ஈகோ,  மன வருத்தம் என எந்தப் பிரச்னைகளும் இல்லை. நான் அரசியலுக்கு வருவதற்கு  முன்னரே நன்றாகப் பேசக்கூடிய ஆள். இப்போது தடாலடியாகப் பேச வேண்டிய  இக்கட்டோ கட்டாயமோ இல்லை! நான் இப்போது தேர்தல் களத்தில் பேசுவதற்கான  தயாரிப்புகளில் இருக்கிறேன். கட்சியின் வரலாறுகளில் தொடங்கி தலைவரது  போராட்ட வாழ்க்கை வரை அனைத்தையும் எடுத்துப் படித்துக்கொண்டு இருக்கிறேன்.  கழக ஆட்சியின் சாதனைகளையும் படித்து வருகிறேன். எதிர்க் கட்சிகளின்  பிரசாரத்தைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. தலைவர் செய்த நல்ல  காரியங்களைச் சொன்னாலே போதும்!''''எதிர்க் கட்சியினர்  திட்டுவது இருக்கட்டும்... உங்கள் கூட்டணியில் இருக்கும்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களே  தி.மு.க-வை வறுத்தெடுக்கிறார்களே?''
''கூட்டணி குறித்த கருத்து வேறுபாடுகளைப்  பேசுகிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அதே நேரம் சம்பந்தமே இல்லாத  காரணங்களுக்காகத் தலைவரைக் குறிவைத்து சிலர் பேசுவதைத் தாங்கிக்கொள்ள முடிய  வில்லை. ஆனாலும், தலைவருக்காகவே அத்தனையையும் பொறுத்துக்கொண்டு அமைதி யாக  இருக்கிறோம்!''

No comments:
Post a Comment