Saturday, August 7, 2010

செல்போனில் காரை லாக் செய்ய முடியுமா?

காரை பூட்டு வைத்து பூட்ட முடியும். செல்போன் கொண்டு பூட்ட முடியுமா? ''நிச்சயம் முடியும்!'' என்று கூறுகிறார் கோவை காரமடை அருகே உள்ள சீளியூரைச் சேர்ந்த அருண். தனது காரில் செல்போன் லாக்கைப் பொருத்தி, நமக்கு இயக்கியும் காட்டினார்.
காரில் இருந்த செல்போனில் ஒரு 'லைஃப் டைம்' சிம் கார்டு பொருத்தி இருக்-கிறார். அதிலிருந்து சில ஒயர்கள் காரின் கதவுகளில் இணைக்கப்பட்டு இருந்தன. வேறு சாவி கொண்டு காரின் கதவைத் திறக்க முயற்சித்ததும், அவர் கையில் இருந்த செல்போனுக்கு உடனடியாக எஸ்எம்எஸ் வந்து நம்மை ஆச்சர்யப்படுத்தியது.
''இந்த செக்யூரிட்டி சிஸ்டம் மூலம், நமக்கும் நமது காருக்கும் எத்தனை கிலோ மீட்டர் இடைவெளி இருந்தாலும், நாம் இருக்கும் இடத்திலிருந்தே காரை 'ஆன்' செய்யவும், 'ஆஃப்' செய்யவும் முடியும். காரில் இணைக்கப்பட்டுள்ள ஒயர்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அந்தப் பகுதிச் செயல்பாடுகள் முழுவதும் செல்-போனுடன் 'கனெக்ட்' ஆகியிருக்கும். யாராவது காரைத் திருட முயற்சித்து கதவைத் திறந்தாலோ, காரை ஓங்கித் தட்டினாலோ உடனே உங்களுக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். மேலும், இன்னும் 5 நம்பர்களுக்கு இந்த 'அலர்ட் எஸ்எம்எஸ்' வருவது போலவும் செட் செய்ய முடியும்.
இது போன்ற கார் செக்யூரிட்டி சிஸ்டத்தை நாமேகூட செல்போனில் உள்ள போர்டில் 'எம்பெடல் சாப்ட்வேர்' பொருத்தி உருவாக்க முடியும். அதற்கு சில நூறு ரூபாய்கள் மட்டுமே செலவாகும். கூடுதலாக கொஞ்சம் செலவு செய்தால் காரை யாராவது திருடிச் சென்றால், அது இருக்கும் இடத்தைக் கூட செல்போன் டவரை வைத்துத் துல்லியமாக அறிய முடியும்'' என்றவர், ''இது பெரிய சாதனை என்று நான் சொல்லவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை வைத்து எப்படியெல்லாம் நமக்குத் தேவையான விஷயங்களைச் செய்துகொள்ள முடியும் என்பதை விளக்கவே இதைச் செய்தேன்!'' என்கிறார் அருண்!

No comments:

Post a Comment