Friday, August 6, 2010

நாட்டு வைத்தியம்

சளியுடன் சண்டையிடும் கற்பூரவள்ளி பஜ்ஜி..!
'தென்மேற்கு பருவ மழை ஆரம்பம்'னு நியூஸ் வந்தாலே... வழக்கமா, கேரளாவை ஒட்டின பகுதியிலதான் மழை கொட்ட ஆரம்பிக்கும். இந்தத் தடவை என்னடான்னா... தமிழ்நாட்டுலயும் பரவலா கொட்டித் தீர்க்குது. இந்த மெட்ராஸ் கெட்டகேடு... சாயங்காலமாயிட்டா, ஊட்டி கணக்கால்ல மாறிடுது. சும்மா சிலுசிலுனு காத்தடிக்கறப்ப சுகமாத்தான் இருக்குது. ஆனா, ராத்திரி படுத்து, காலையில எழுந்திரிச்சா... தொண்டையைக் கட்டிக்கிட்டு, சமயத்துல மூச்சுத் திணறுது. சளி, தொண்டைவலி, காய்ச்சல்னு மக்க மனுஷருங்க ரொம்பவே கஷ்டப்படுறாங்க. இதெல்லாம் வழக்கமா மழைக் காலத்துல வர்றதுதான். இந்தத் தடவை கொஞ்சம் சீக்கிரமாவே வர ஆரம்பிச்சாச்சு. அதுக்காக சில வைத்தியம் சொல்றேன் கேட்டுக்கங்க... பயன்படுத்தி சுகம் காணுங்க. போற எடத்துல எந்தத் தண்ணி கெடைச்சாலும் குடிக்கறது, ஐஸ் தண்ணிய வாங்கி மொடமொடனு குடிக்கறது இதெல்லாம்தான் பிரச்னைக்கு அடிப்படையே! லேசா தொண்டை கரகரனு இருந்தாலே உஷாராயிடணும். குடிக்கற பக்குவத்துல இருக்கற சுடு தண்ணியைக் குடிச்சு வந்தா... கூடுமானவரைக்கும் குணம் கிடைக்கும். கூடவே, கல் உப்பை வெந்நீர்ல போட்டு தொண்டையை நல்லா நனைச்சி கொப்புளிக்கணும். காலையிலயும், ராத்திரி தூங்கப் போறப்பவும் இதை செஞ்சா போதும். நல்ல பலன் கிடைக்கும்.
இந்த மாதிரி நேரங்கள்ல இஞ்சிச்சாறு குடிக்கறது ரொம்ப நல்லது. டீ குடிக்கறப்ப, அதுல இஞ்சியைச் சேர்த்துக்கிட்டாலே போதும். சாயங்காலப் பொழுதுல சுக்கு காபி குடிக்கறது நல்லது. அப்புறம்... இஞ்சித் துவையல், தூதுவளை துவையல், கற்பூரவள்ளி பஜ்ஜினு எல்லாமே சளிக்கு எதிரா இருந்தா... எந்தச் சளியும் நம்மை அண்டாது.
குடிக்கற தண்ணியில இருந்து சாப்பாடு வரை எல்லாமே சூடா இருக்குற மாதிரி பார்த்துக்கறது முக்கியம்.
தொண்டை கரகரப்பா இருந்தா... நல்லா தூள் செஞ்ச ஒரு சிட்டிகை திப்பிலியோட, தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் நல்ல நிவாரணம் கிடைக்கும். இருமல் இருந்தாலும் இதை சாப்பிடலாம். ஆஸ்துமா பிரச்னை உள்ளவங்களுக்குகூட இந்த வைத்தியம் நிவாரணம் கொடுக்கும்.
ராத்திரி நேரத்துல, ஒரு முழு பூண்டை உரிச்சி, நூறு மில்லி பால், பாதி அளவு தண்ணி சேர்த்து வேக வைக்கணும். இறக்குற சமயத்துல கொஞ்சம் மிளகுப்பொடி, மஞ்சள் தூள், பனங்கல்கண்டு சேர்த்து அடுப்பைவிட்டு இறக்கணும். பிறகு, நல்லா கடைஞ்சி கிடைக்கற விழுதைச் சாப்பிடணும். ராத்திரியில 'கிர்புர்'னு இழுக்காம நிம்மதியா தூங்கலாம்.
குழந்தைகளுக்கு சளி பிடிச்சி அவதிப்பட்டா... தூதுவளை இலைச்சாறு, இஞ்சிச் சாறு, துளசிச்சாறு எல்லாத்தையும் சம அளவு எடுத்து அதோட தேன் சேர்த்து ஒரு தேக்கரண்டி அளவு மூணு நாள் சாப்பிடக் கொடுத்தாலே... சளி காணாமப் போயிரும். 'தெக்கத்திக்கணை'னு ஒண்ணு சொல்லுவாங்க. சளி பிடிச்சிக்கிட்டு இழுப்பு மாதிரி வர்றதைத்தான் இப்படி சொல்வாங்க. இதுக்கும்கூட மேல சொன்ன தூதுவளை, இஞ்சி, துளசிச்சாறு வைத்தியம் தீர்வு கொடுக்கும். கபம் கட்டியிருந்தா... அறுத்து எடுத்துட்டு வந்துரும்.

No comments:

Post a Comment