Thursday, August 19, 2010

நான் மகான் அல்ல

* பையாவின் வெற்றியை அடுத்து கார்த்தி, வெண்ணிலா கபடி குழுவின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன், சிங்கம் படத்தின் வெற்றியை அடுத்து ஞானவேல் என்ற இந்த வெற்றி கூட்டணியின் அடுத்த படைப்பு 'நான் மகான் அல்ல'.
* பேரரசுவின் 'பழனி' படத்தை அடுத்து, தெலுங்கு பக்கம் சென்றுவிட்ட காஜல் அகர்வால் தமிழில் இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியிருக்கிறார்.
* 'பையா'வின் கார்த்தி, யுவன்சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் மதி கூட்டணி இப்படத்திலும் தொடர்கிறது.
* கண்டிப்பான அப்பாவுக்கும் ஜாலியான மகனுக்கும் இடையே நடக்கும் கதையும், அதனுடன் சென்னையில் நடக்கும் க்ரைம் சம்பவங்களும் இணைத்து ஒரு க்ரைம் த்ரில்லராக வெளிவருகிறது. 'நான் மகான் அல்ல'. இதில், கார்த்தியின் பெயர் ஜீவா.
* சூப்பர் ஸ்டார் ரஜினி, ராதா நடித்து 1984ம் ஆண்டு வெளிவந்தது 'நான் மகான் அல்ல' திரைப்படம். அப்படத்தில் பெயரை தவிர இத்திரைப்படத்துக்கும் ரஜினி படத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
* 'பையா'வை அடுத்து கார்த்தியின் இப்படத்தையும் வாங்கி வெளியிடுகிறார், தயாநிதி அழகிரி.
* இத்திரைப்படத்தின் முதல் பாதி கதையை கேட்டுவிட்டு, தன்னால் இந்த அளவுக்கு காமெடி கலந்த கதாப்பாத்தில் நடிக்க முடியுமா என்று தயங்கியதாகவும், இயக்குனர் தான் தன்னால் இத்திரைப்படத்தை செய்ய முடியும் என்று நம்பிக்கை ஊட்டியதாகவும் கூறுகிறார் கார்த்தி.
* நான் மகான் அல்ல ஒரு காமெடி கலந்த த்ரில்லர் கதை என்றாலும், இத்திரைப்படத்தின் கடைசியில் மட்டும் தான் சண்டைக் காட்சி உண்டாம். ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பு ஏற்படாத வகையில் திரைக்கதை அமைத்திருப்பதாகச் சொல்கிறார், இயக்குனர் சுசீந்திரன்.
* இத்திரைப்படத்தில் வரும் 'இறகை போலே' என்ற பாடல் தான், தாம் பாடிய பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் என்று தெரிவித்துள்ளார் இப்படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
* ஆகஸ்ட் 20-ல் வெளியாகிறது நான் மகான் அல்ல. அந்த தினத்தில் தொடங்கி, இப்படம் திரையிடப்படும் தியேட்டர்களில் மட்டுமே அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவின் டிரெய்லர் திரையிடப்படுகிறது என்பது போனஸ் தகவல்.

No comments:

Post a Comment