உலகிலேயே விலை அதிகமான கார் எது?'  எனக் கேட்டால், பலரும் பிஎம்டபிள்யூ, பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், லம்போகினி  என்று பல பெயர்களைச் சொல்லக்கூடும். ஆனால், உண்மையிலேயே உலகின் விலை  அதிகமான கார், புகாட்டி வெரான்தான். இதன் ஆரம்ப மாடலின் விலையே 17.5 கோடி!                                           
ஏரோ டைனமிக்ஸ்
மணிக்கு 400 கி.மீ  வேகத்துக்கும் மேல் பறக்கும் கார் என்பதால், இதன் ஸ்டெபிளிட்டி சிறப்பாக  இருக்க வேண்டியது கட்டாயம். அந்தச் சவாலைத் திறமையாகச் சமாளித்து, வெரான்  காரைத் தயாரித்திருக்கிறது புகாட்டி. இந்த காரின் கீழ்ப் பகுதி ஃபார்முலா-1  கார் போலவே தயாரிக்கப்பட்டு இருக்கிறது. வேகமாகப் போகும்போது  பறந்துவிடாமல் இருப்பதற்காக பெரிய ஸ்பாய்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த  காரின் ரியர் வியூ கண்ணாடிகள்கூட காருக்கு 'டவுன்ஃபோர்ஸ்' கொடுக்க வேண்டும்  என்கிற நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன.இன்ஜின்
இதில் 16 சிலிண்டர்கள் உள்ளன. ஒரு சிலிண்டருக்கு 4 வால்வு வீதம் மொத்தம் 64 வால்வுகள் இருக்கின்றன. 1001 bhp பவர், V  16 இன்ஜின் என டெக்னிக்கல் விவரங்களைப் படிக்கும்போதே மயக்கம்  வந்துவிடும். அந்த அளவுக்கு உலகின் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் அனைத்தும்  இந்த புகாட்டியில் உண்டு. இவ்வளவு பவரையும் சமாளிப்பதற்கு ஏற்றபடி சூப்பர்  ஸ்பெஷல் கியர் பாக்ஸ் இருக்கிறது. ட்யூல் கிளட்ச், சீக்வென்ஷல்  ஷிஃப்ட்டிங், 7-ஸ்பீடு கியர் பாக்ஸ் ஆகியவை இதன் மற்ற அம்சங்கள். வெறும்  0.2 விநாடியில் கியரை மாற்றிவிட முடியும். காரின் ஒட்டுமொத்த பவரும்,  எப்போதுமே நான்கு வீல்களுக்கும் செல்லும் வகையில் 'ஆல் வீல் டிரைவ்'  சிஸ்டமும் உண்டு.டயர்
இவ்வளவு வேகமான காருக்கு  டயர்கள் தயாரிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. மிகவும் வேகமாகப் போகும்  ஃபார்முலா-1 கார்களில் பொருத்தப்படும் டயர்கள் அதிகபட்சம் 150 கி.மீ  தூரத்துக்கு மேல் தாங்காது. கிழிந்துவிடும். ஆனால், பொதுச் சாலைகளில்  பயன்படுத்தக் கூடிய டயர்கள் நீடித்து உழைக்க வேண்டும். அதேசமயம், மணிக்கு  400 கி.மீ வேகத்தையும் தாங்க வேண்டும். இந்தச் சவாலைச் சமாளிக்கக்கூடிய  அளவுக்கு மிஷ்லின் ஒரு சூப்பர் டயரைத் தயாரித்திருக்கிறது.முன் பக்கம் 520 மிமீ, பின் பக்கம் 540 மிமீ ரிம் அளவுகள் கொண்ட பிரம்மாண்ட டயர்களைக் கொண்டிருக்கிறது புகாட்டி வெரான். பஞ்சரானாலும் 200 கி.மீ தூரம் வரை மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்ல முடியும் என்பது புகாட்டியின் இன்னொரு ஸ்பெஷல்!
இன்னொரு வயிற்றெரிச்சல் விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேனே! ஷோ ரூம் இந்தியாவில் வருவதற்குள்ளாகவே 3 கார்கள் புக்கிங் ஆகி விட்டதாம்!

No comments:
Post a Comment