தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு நிறைவு  விழாவையொட்டி அடுத்த மாதம் 25,26 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் 2 நாட்கள்  விழா நடத்தப்படுகிறது. முதல்வர் கருணாநிதி தலைமையில் பெரிய கோயிலின்  ஆயிரமாண்டு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடுவதுடன், பிரமாண்ட கலை  நிகழ்ச்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
ராஜராஜ  சோழனின் தஞ்சைப் பெரிய கோயில் 1000 ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக  கொண்டாடுவது குறித்த கலந்தாய்வு கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில்  நேற்று கோட்டையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நூலக கூட்ட அரங்கில்  நடைபெற்றது. 
கூட்டத்தில் நிதி அமைச்சர்  அன்பழகன், மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் தமிழக  அமைச்சர்கள் கோ.சி.மணி, கே.என்.நேரு, பரிதி இளம்வழுதி,  கே.ஆர்.பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, கனிமொழி எம்.பி., தலைமை  செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, தொல்லியல் துறை ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர்,  நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம், உள்துறை முதன்மை செயலாளர்  ஞானதேசிகன், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர்  அசோக்வரதன் ஷெட்டி, நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், அரண்மனை  தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் எஸ்.பாலாஜி ராஜா போஸ்லே, முனைவர்  இரா.நாகசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
தஞ்சை  பெரிய கோயில் ராஜராஜ சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த  கோயில் ‘பெருவுடையார் கோயில்’ என்றும் பிரகதீஸ்வரர் கோயில் என்றும்  அழைக்கப்படும். கோயில் முழுவதும் கருங்கற்களால் அழகிய கலைநுட்பங்களுடன்  உருவாக்கப்பட்டுள்ளது. கோயில் விமானம் 216 அடி உயரம் கொண்டதாகும். 
தஞ்சை  பெரிய கோயிலின் பிரதான நுழைவு வாயிலின் முன்பு உள்ள பிரமாண்டமான நந்தி  சிலை கம்பீரமாக இருக்கும். இதன் நீளம் 16 அடி, உயரம் 13 அடி ஆகும். இது,  ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்டது. 
கூட்டத்தில்  நிதி அமைச்சர் அன்பழகன், மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும்  தமிழக அமைச்சர்கள் கோ.சி.மணி, கே.என்.நேரு, பரிதி இளம்வழுதி,  கே.ஆர்.பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, கனிமொழி எம்.பி., தலைமை  செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, தொல்லியல் துறை ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர்,  நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம், உள்துறை முதன்மை செயலாளர்  ஞானதேசிகன், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர்  அசோக்வரதன் ஷெட்டி, நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம், அரண்மனை  தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் எஸ்.பாலாஜி ராஜா போஸ்லே, முனைவர்  இரா.நாகசாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு: 
ராஜராஜ  சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலின் 1000 ஆண்டு நிறைவு விழாவை தஞ்சையில்  அடுத்த மாதம் 25, 26ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது. 
விழாவின் முதல் நாள்  காலையில் நாட்டுப்புற கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகளும்,  மாலையில் தஞ்சை பெரிய கோயிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கம்  சார்பில் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் ஆயிரம் நடன கலைஞர்கள்  கலந்து கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறும். நடன நிகழ்ச்சிக்கு முன் நாதஸ்வர  இசை நிகழ்ச்சியும், நடன நிகழ்ச்சிக்கு பின் 100 ஓதுவார்கள் திருமுறை இசை  நிகழ்ச்சியும் நடத்தப்படும். 
இரண்டாவது  நாள் காலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும், தஞ்சை பெரிய  கோயிலில் பொது அரங்கமும் நடைபெறும். அன்று மாலையில் தஞ்சை திலகர் திடலில்  முதல்வர் கருணாநிதி தலைமையில் தஞ்சை பெரிய கோயில் 1000 ஆண்டு நிறைவு நினைவு  நாணயம் மற்றும் அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது. 
தஞ்சை  மாநகருக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை தொடங்குவது பற்றிய நிகழ்ச்சியும்  நடைபெறும். அந்த நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர்களையும், பல்வேறு  சான்றோர்களையும், ஆன்றோர்களையும், அரசியல் தலைவர்களையும் அழைப்பதென்றும்,  1000 ஆண்டு நிறைவடைவதையொட்டி வரலாற்று கண்காட்சி ஒன்று நடத்தவும் முடிவு  செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment