Sunday, August 8, 2010

57வது பிலிம்பேர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

57வது பிலிம்பேர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழில் சிறந்த நடிகராக ‘காஞ்சிவரம்’ படத்தில் நடித்த பிரகாஷ்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
சிறந்த நடிகைக்கான வ¤ருது ‘நான் கடவுள்’ படத்தில் நடித்த பூஜாவுக்கு தரப்பட்டது. 
 
 
சிறந்த படமாக சசிக்குமார், அனன்யா நடித்த ‘நாடோடிகள்’ தேர்வானது. சிறந்த இயக்குனர் விருது ‘காஞ்சிவரம்’ படத்துக்காக பிரியதர்ஷனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த குணசித்திர நடிகராக ஜெயபிரகாஷ் (பசங்க), குணசித்திர நடிகையாக ஷம்மு (காஞ்சிவரம்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது ‘அயன்’ படத்துக்காக ஹாரிஸ் ஜெயராஜுக்கு வழங்கப்பட்டது. ‘அயன்’ பட பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் விருதை நா.முத்துக்குமார் பெற்றார். 
 
 
சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற பின், பிரகாஷ்ராஜ் பேசியதாவது:
இங்கு நான்கு மொழியைச் சேர்ந்த எனது நண்பர்கள் கூடியிருப்பதால் முக்கியமான ஒருவரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவர் போனி வர்மா. (அவரை மேடைக்கு அழைத்தார்). இதுதான் என்னுடைய செல்லம். என் வாழ்க்கையில் இணைந்திருக்கும் புதிய பெண். இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் பேசினார். 
 
 
சிறப்பு ஜுரி விருது இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, மோகன்லால், ஸ்ரீநகர் ரெட்டி, யேக்னா ரெட்டி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ‘நாடோடிகள்’ படத்தில் நடித்த அபிநயா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது. 
 
நடிகர் வினித், நடிகைகள் சமீரா ரெட்டி, லட்சுமிராய், பத்மப்ரியா, ஷர்மிளா, லட்சுமி கோபாலசாமி, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடந்தது.
மற்ற மொழி விருது விவரம்:
மலையாளம்:
சிறந்த படம்: பழ்சிராஜா, சிறந்த இயக்குனர்: ஹரிஹரன் (பழ்சிராஜா), சிறந்த நடிகர்: மம்மூட்டி (பல்லேரி மாணிக்கம்), சிறந்த நடிகை: ஸ்வேதா மேனன் (பல்லேரி மாணிக்கம்).
தெலுங்கு:
சிறந்த படம்: மகதீரா, சிறந்த இயக்குனர்: ராஜமவுலி (மகதீரா), சிறந்த நடிகர்: ராம் சரண் தேஜா (மகதீரா), சிறந்த நடிகை: அனுஷ்கா (அருந்ததி). 
 
கன்னடம்:
சிறந்த படம்: மலேயாலி ஜோதியாலி, சிறந்த இயக்குனர்: குரு பிரசாத் (எதுலு மஞ்சுநாதா), சிறந்த நடிகர்: கணேஷ் (மலேயாலி, ஜோதியாலி), சிறந்த நடிகை: ராதிகா பண்டிட் (லவ் குரு). 
 
 
நிகழ்ச்சியில் மலையாள நடிகை கே.பி.ஏ.எல் லலிதாவுக்கும், கன்னட நடிகர் அம்ரிஷுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
 
விழாவில் நடிகர்கள் சூர்யா, சிம்பு, ஷாம், கார்த்திக், பிரபுதேவா, சிவகுமார், சுமன், ராணா, ராம், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, இயக்குனர்கள் பாலா, ஹரி, தரணி, பார்த்திபன், ஆர்.கே.செல்வமணி, சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, நடிகைகள் சமீரா ரெட்டி, காஜல் அகர்வால், த்ரிஷா, தமன்னா, ஸ்ரேய, அர்ச்சனா, சோனியா அகர்வால், ரீமாசென், சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 
 

No comments:

Post a Comment