Thursday, August 12, 2010

ஏ.டி.எம். 'செக்ஸ்' சென்டர்!

ளைஞர்கள் இந்தியாவின் தூண்கள் என்று நாடே நம்பிக்கொண்டு இருக்க... அந்தத் தூண்களில் சிலது கட்டுப்பாடு எதுவுமின்றி காமத்தின் பக்கம் சரிந்துகொண்டிருக்கின்றன. அடிக்கடி காணக் கிடைக்கும் உதாரணங்களில் லேட்
டஸ்ட் - சமீபத்தில் நமது அலுவலகத்துக்கு வந்த ஒரு வீடியோ கிளிப்பிங். கல்லூரியை ஒட்டியுள்ள ஏதோ வொரு ஏ.டி.எம். சென்டருக்குள் இளசுகள் நடத்தும் காமக்கூத்துதான் கருமாந்திரக் காட்சியாக அதில் பதிவாகி இருக்கிறது!
அந்த வீடியோவில் வருகிறது இந்தக் காட்சி.. ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் ஏ.டி.எம். மெஷினில் பணம் எடுப்பதுபோல் உள்ளே வருகிறார்கள். அந்தப் பெண் பணத்தை எடுக்க முற்படுவதுபோல... பதிலுக்கு அந்த இளைஞன் அவள் பின்புறம் மிக நெருக்கமாக நின்று உரசிக்கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடத் துவங்குகிறான். சின்ன சிணுங்கலுடன் துவங்கும் காட்சிகள் போகப் போக நீலப்படங்களை மிஞ்சும் அளவுக்கு விரிகின்றன. இந்தக் காட்சிகளுடன் ஏ.டி.எம். சென்டரின் கண்ணாடிக் கதவுக்கு அப்பால் பிளாஸ்டிக் சேர் போட்டு காவலாளி அமர்ந்து இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. அவர் இதை கவனித்ததாகவோ, கண்டு கொண்டதாகவோ தெரியவில்லை.

சில்மிஷங்கள் தொடர... திடீரென அந்தப் பெண்ணை விட்டுவிட்டு தான் மட்டும் வெளியேறும் இளைஞன் காவலாளியிடம் சென்று ஏதோ பேசி விட்டு உள்ளே வருகிறான். ஆபாசக் காட்சிகள் தொடர்கின்றன. இவை அனைத்தும் அந்த ஏ.டி.எம்-ன் பாதுகாப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தவிர, அந்த ஏ.டி.எம்-ன் சுவிட்ச் போர்டு, அதன் பக்கத்தில் சில அடையாளங்கள் ஆகியவையும் பதிவாகி இருந்தன. அந்த வீடியோ காட்சிகளை நம்மிடம் சேர்ப்பித்த வரிடம், 'எங்கிருந்து இந்த வீடியோ காட்சிகள் கிடைத்தன?' என்று கேட்டோம்.
தங்கள் அடையாளங்களை மறைத்த அவர்கள், ''நாங்கள் காஞ்சிபுரம் பகுதியில் படிப்பவர்கள். இங்கு உள்ள கல்லூரி மாணவர்களின் மொபைல் போன்களில் இந்த காட்சிகள்தான் இப்போது ஹாட் டவுன்லோடு! அதனால், காஞ்சிபுரம் வட்டாரத்தில் இருக்கும் கல்லூரிகளில் ஏதோ ஒன்றின் வாயிலில் இருக்கும் ஏ.டி.எம். சென்டரில்தான் இந்த காட்சிகள் பதிவானதாக மாணவர்களுக்குள் பேச்சு இருக்கிறது...'' என்றார்கள்.
அந்தப் பகுதிகளில் இரண்டு நாட்கள் விடாப்பிடியாக தொடர்ந்து தேடியபோது அந்தக் காட்சிகளுடன் முழுமையாக இசைந்து போகக்கூடிய ஒரு ஏ.டி.எம். சென்டர் குறிப்பிட்ட ஒரு கல்லூரியின் அருகில் இருந்தது. நாம் ஏற்கெனவே பார்த்த அடையாளங்களுடன் காவலாளியும்! சில நிமிடங்களில் நாம் வெளியே வர... அதற்கென்றே காத்திருந்ததுபோல ஒரு ஜோடி அவசரமாக உள்ளே நுழைந்தது. நாம் காத்திருந்தோம். 10 நிமிடங்களுக்கு பிறகும்கூட அவர்கள் வெளியே வரவில்லை. காவலாளியிடம் வீடியோ காட்சிகள் குறித்து பேச்சுக் கொடுத்தோம். கேட்டதும் தேள் கொட்டியதுபோல அதிர்ச்சி அடைந்தவர், ''அப்படி எல்லாம் எதுவுமில்லையே! நீங்க யாரு..? பணம் எடுத்துட் டீங்கன்னா கிளம்புங்க...'' என்று நம்மைக் கிளப்பிய கையோடு ஏ.டி.எம். கதவை அவசரமாகத் தட்ட... அதன் பிறகே அந்த இளசுகள் வெளியே வந்தனர்.
இதையடுத்து, அந்தக் கல்லூரி வளாகங்களில் மெள்ள பேச்சுக் கொடுத்தோம். அவர்கள் சொன்ன தகவல்கள் இன்னும் அதிர்ச்சி ரகம். ''இது மட்டுமா..? இதுமாதிரி இன்னும் எத்தனை கிளிப்பிங்க்ஸ் வேண்டும்..?'' என்று கேட்டுக்கொண்டே சுமார் 10-க்கும் மேற்பட்ட காட்சிகளை நமது மொபைலுக்கு டிரான்ஸ்ஃபர் செய் தனர். தொடர்ந்து, ''இது ரொம்ப நாளா நடக்குது. ஏ.டி.எம். சென்டர் வீடியோ காட்சிகளில் இருக்கும் ஜோடிகளில் பெரும்பாலோனோர் இந்த கல்லூரிகளில் படிப்பவர்கள்தான். கல்லூரியின் மாடி படிக்கட்டு அடியிலும் பூங்காப் புதர்களிலும் ஒதுங்குவது போதாது என்று ஏ.டி.எம். சென்டரிலும் இப்போது ஏ.சி. குளிர்ச்சியோடு புகுந்து அசிங்கம் பண்ணுகிறார்கள்.'' என்றார்கள்.
இன்னும் சிலரோ, ''ஏ.டி.எம். சென்டரில் பாதுகாப்புக் காக வைக்கப்பட்டு இருக்கும் கேமராவில்தான் இந்தக் காட்சிகள் பதிவாகி இருக்கின்றன. அங்கே கேமரா இருக்கும் என்பதுகூடவா கல்லூரி இளைஞர்களுக்கு தெரியாமல் போகும் என்ற கேள்வி எழுகிறது. அப்படியே இருந்தாலும், வங்கியில் பணிபுரிகிற ஊழியர் களின் உதவி இல்லாமல் இது எப்படி வெளியில் வந்திருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. இன் னொரு கோணத்தில், இந்த ஜோடிகளுக்கு தெரியாமல் இதே கல்லூரியைச் சேர்ந்த வேறு குரூப்பே ஏ.டி.எம். சென்டரில் ரகசிய கேமராவை பொருத்தி இப்படிப் படம் பிடித்து இருப்பார்களோ என்ற சந்தேகம் இருக் கிறது'' என்றார்கள்.
ஏ.டி.எம். சென்டர்களில் உள்ள கேமராக்கள் திருட்டு, கொள்ளைக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாதிரியான காட்சிகள் வெளிவருவதால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளவும், அடுத்தவரை மிரட்டவும் இது பயன்பட வாய்ப்புள்ளது.
குறிப்பிட்ட ஏ.டி.எம். உள்ள இடத்துக்கு அருகில் இருக்கும் கல்வி நிறுவனத்தின் முக்கிய பொறுப் பாளரிடம் இதுகுறித்து விசாரித்தோம். பொறுமையாகக் கேட்டவர், ''நீங்கள் சொல்லும் ஏ.டி.எம். சென்டருக்கும் கல்லூரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது பொது மக்களின் உபயோகத்துக்காக தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. அதனால், ஏ.டி.எம். சென்டரில் நடந்தவை பற்றி எங்கள் கல்லூரி நிர்வாகத்துக்குத் தெரிய வரவில்லை. எப்படிப் பார்த்தாலும், கல்லூரி வளாகத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்பும் இல்லை. எங்கள் கல்லூரியில் ஒழுக்கத்துக்கே முதலிடம் கொடுத்து இருக்கிறோம். தீவிரக் கண்காணிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறோம். இருந்தாலும் நீங்கள் சொல்கிறீர்கள் என்ப தால் கண்காணிப்பை மேலும் பலப்படுத்துகிறோம்'' என்றார் பொறுப்பாக..!
பாடுபட்டுப் பணத்தைக் கட்டி தங்களை கல்லூரியில் சேர்த்த பெற்றோரின் பரிதாப முகங்களை மனதில் இருத்திக் கொண்டு... அந்தந்த மாணவ மாணவியரே சுய கட்டுப்பாடு ஏற்படுத்திக் கொள்வதுதான் இதில் முக்கியம். இல்லாவிட்டால், ஆயிரம் வகையான கண்காணிப்பும் கட்டுப்பாடும் உண்டாக்கித்தான் என்ன பயன்?

No comments:

Post a Comment